பணம் , சொத்து , உலக பொருளாதாரம்
இந்த பெரிய பெரிய வார்த்தைகளுக்குள் இருக்கும் அர்த்தங்களை புரிந்தது கொள்ள பொதுவாக தெரிந்தது இருக்க வேண்டிய உலகளவில் பயன்படுத்த படும் அடிப்படை சொற்கோவைகள் பற்றி ஒரு சுருக்க பதிவு ....
முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டு .....
ஒன்று முதலீடு செய்ய கூடிய சொத்து இரெண்டாவது நிகர சொத்து
முதலீடு செய்ய கூடிய சொத்து $$$ :
ஒருவருடைய சொத்தை ....சொத்து என்று பொதுவாக நாம் சொன்னால் .... நமக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் முடிவு ..
பிறகு எப்படி சொல்லுவது ....
சொத்து மற்றும் முதலீடு செய்ய கூடிய சொத்து (Investable Assets) என்று பிரித்து சொல்லுவதுதான் சரி ...புரியலையா அடுத்த வாசிங்க ...
ஒருவர் வசிக்கும் முதன்மை வீடு, பயன்படுத்தும் முதன்மை வாகனம் , நகைகள் , ஓவியங்கள் , சிலைகள் , விலையுயர்ந்த மதுபானங்கள் , தட்டு முட்டு பொருட்கள், போன்றவற்றில் செய்யபட்டிருக்கும் பண முதலீடுகளை சொத்து என்கின்றனர் .
இவற்றை தவிர்த்து பிறவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ள பணம் அல்லது முதலீடு செய்ய தயாராக கையில் உள்ள பணம் ஆகியவை முதலீடு செய்ய கூடிய சொத்து என்கின்றனர் ....
சுருக்கமா உடனடி பயன் பாட்டிற்கு அல்லாமல் முதலீட்டு மதிபிர்க்காக மட்டும் செயப்படும் அல்லது செய்ய தயாராக உள்ள பணம் , முதலீடு செய்ய கூடிய சொத்து எனப்படும் ....
நிகர சொத்து $$$:
நிகர சொத்து மதிப்பு ( Net Worth ) என்பது .....நீங்கள் இருக்கும் வீடு அன்றாடம் பயன்படுத்தும் வாகனம் , நகை நட்டுக்கள் இன்ன பிறவற்றை வாங்க உண்டான கடன்கள் ...அவைகளுக்கு ஆகும் பராமரிப்பு செலவுகள் , பயன் படுத்த ஆகும் செலவுகள் , உங்களுக்கு , உங்கள் மனைவி , பிள்ளைகள் ,( காதலிகள் இருப்பவர்கள் அவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள் ) ஆகியோருக்கு ஆகும் செலவுகள் ...
உங்கள் உற்றார் உறவினர் ஆகியவர்களை பராமரிக்க ஆகும் செலவு ..பிறப்பு , இறப்பு ....காது குத்து , கல்யாணம் .... ஆகிவற்றிற்கு ஆகும் செலவுகள் இத்துடன் , இன்சுரன்ஸ் தவணைகள் , வங்கி தவணைகள் , திருப்பி தர வேண்டிய கடன்கள் , மருத்துவ செலவுகள் , ஆகியவற்றையும் கூட்டி வரும் மொத்த தொகையுடன் ….. அதே மொத்த தொகையிலிருந்து ஒரு பத்து சதவிதத்தை எதிர்பாரா செலவுகள் , பண வீக்கம் ஆகியவற்றிற்காக கூட்டி கொள்ளுங்கள் இதுதான் உங்கள் மொத்த பொறுப்பு ...
இப்போது உங்கள் சொத்து அல்லது பயன்பாட்டு முதலீடுகளை கூட்டி கொள்ளுங்கள் ..( அதாவது முன் சொன்ன சொத்துக்களை கூட்டி கொள்ளுங்கள் ) ..அவ்வாறு வரும் மொத்த தொகையிலிருந்து உங்கள் மொத்த பொறுப்பை கழிக்க வருவதே நிகர சொத்து அதாவது நெட் அசட் .....
நமக்கு எவ்வளவு நெட் அசட் தேருமுனு கணக்க போட்டு வைங்க ...
அடுத்த பதிவில் சொத்துகாரர்கள் .....
நல்ல தகவல் லாரன்ஸ் .
ReplyDeleteதொடர்ந்து தொய்வு இன்றி எழுத வாழ்த்துக்கள் .
ஆகட்டும் வீரா
Delete