Tuesday, October 8, 2013

அண்டம்



நாம பேசுர பேச்சை பாத்து ..... நம்பல ஒரு அஸ்ட்ரோ பிசிஸிட் ( வானியற்/ பேரண்ட .... பௌதிக அறிவியலாளர் ) ..அப்படின்னு பல பேர் நம்புறாய்ங்க ..அதிலும் இந்த Madhanagopal Sridharan ... மனுஷன் என்ன ரொம்பவே நம்புறார் ...நானும் சரி இத அப்படியே மெயின்டெயின் பண்ணி ஒரு ரவுண்டு வரலாம்னு முடிவுக்கு வந்துட்டேன் ....

சரியா 50 குட்டி குட்டி பதிவுகளில்( தேனம்மும் இல்ல ) வானியல் பொவ்திக சேதிகள் பதிய போறேன் ....நம்ம கண்ணு முன்னாடி இருக்க இந்த ஆச்சரியத்த தெரிஞ்சிக்காம செத்தோம் நாம சுத்த வேஸ்ட் ..... 60 சொச்சம் வருஷம் வாழ்க்கை அம்புட்டும் ஒரு சோப்பு குமிழ் மாதிரி .....டுப்  ......அவ்ளதான் ....அதுக்குள்ளே என்னனென்னவோ ...அதுல இதுவும் முக்கியம் .....மற்றவை கீழே .....⇓⇓⇓

அண்டத்துல என்னைக்கோ..... எப்பவோ .......ரொம்ம்ம்ம்ம்ப..... வருசத்துக்கு முன்னாடி ஒரு பெரிய வெடி வெடிச்சி ........ எங்க பாத்தாலும் ஒரே போக ..தூசு .....கொஞ்சம் பொருத்து நம்ம பால் வீதி மண்டலம் ........அப்புறம் ஒரு நாள் சூரியன் ....அத சுத்தி வரும் பூமி .....இப்படி ....லடக்கா ..லொடக்கா .....வெங்காயம் ...கத்தரிக்கா .......இதெல்லாம் சொல்லுறதுக்கு முன்னாடி ..... இத படிகிறவைங்க மண்டைய கொதிக்க விட்டாதான் ....மத்ததெல்லாம் அதுல இசியா வேகும் அதனால ..... இப்ப குக்கர்ல ரெண்டு விசில் வச்சி நம்ப மண்டைய அவிக்க போறோம் .....


அண்டம் அப்படினா ..எதோ பித்தள அண்டா அப்படின்னு நெனச்சிகிட்டு உயிர் வாழும் ஜீவன்கள் கவனமா பலோவ் பண்ணுங்க ......


இந்த BCCI மற்றும் ICC பெரிச்சாளிகள் நம்ப அரசியல் வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்து கொட்டம் அடிக்கும் கிரிகெட் ஸ்டேடியத்துக்கு இப்ப நாம போறோம் ...

யாருமே இல்லாத ஸ்டேடியம் மவ்னமா இருக்கு ...நீங்க அப்படியே ஸ்பெசல் பாஸ் வாங்கிட்டு நேரா பிச்சுக்கு போறீங்க .... ஸ்டம்ப் பக்கம் போய் நின்னுகிட்டு அப்படியே சுத்தி ஸ்டேடியத்த பாக்குறிங்க .....

தலைக்கு மேல வெளுத்து போன நீலவானம் ..... ஒயரத்துல ரெண்டு காகயோ ..கழுகோ .....பறந்துகிட்டு இருக்கு ...... கொஞ்சம் சூடா காத்து ..... பவிலியன் கிட்ட .... வாச்சி மேனும் ....துப்புரவு செய்யும் பெண்ணும் எதோ வெத்தல பாக்கு விஷயமா தீவிர பேச்சுல இருக்காங்க .......

நீங்க அப்படியே கேமராவ திருப்பி ......பிச்சுக்கு உங்க பார்வைய கொண்டுவரிங்க .... உங்க கால் முட்டிக்கு கொஞ்சம் ஒயரமா ஸ்டெம்ப் இருக்கு ..... இப்ப தான் முக்கிய கட்டம் ..கவனமா கேளுங்க ..... இப்ப திடிர்னு நீங்க குள்ளமா ஆக ஆரம்பிச்சிடுரிங்க .... முட்டிக்கு மேல வரிக்கும் இருந்த ஸ்டெம்ப் இப்ப உங்க இடுப்பு உயரம் இருக்கு ......என்னது அப்படின்னு நெனைக்கறத்துகுள்ள ... இப்ப ஸ்டெம்ப் உங்க தலைய தாண்டி ஊயரமா தெரியுது ....உங்க சட்ட பேண்டெல்லாம் லூசாகி தொங்குது ....

இன்னும் வேகமா இப்ப சுருங்க ஆரம்பிசிடுரிங்க ....சுருங்கி சுருங்கி ......ஸ்டெம்ப் இப்போ நீங்க மல்லாக்க படுத்துகிட்டு பார்த்தாதான் ..பெய்ல்ஸ் தெரியும் அந்த ஒயரமா தெரியுது ....இன்னும் சுருங்ங் ங் ங் ங்கி .... உங்க வீ ட்டு வாசிங் மெஷின் சைஸ்ல எது மேலேயே நிக்குரிங்க .....தர முழுக்க உருண்டயா... வட்டமா ... கட்டமா ..கன்னாபின்னான்னு பழுப்பா ...கருப்பா...சிவப்பா ..ஏதே பாறை பாறையா கெடக்கு ......

என்னது இது...... அட மண்ணுதுகளு ..அதுல ஒன்னு மேலத்தான் நிக்கோம் அப்படின்னு நீங்க நெனைக்கவும் ...நீங்க திரும்ப சுருங்கி ....அந்த மண்ணு துகள் மேல இருந்து .....தொப் .....அம்மா ...மெதுவா முதுக புடிச்சிக்கிட்டு ...எழுந்து பாத்தா அந்த வாசிங் மெஷின் இப்ப 20 அடுக்கு மாடி உயரம் தெரிது ......

இப்ப என்ன பண்ண ......சரி இங்க இருந்து ....பெவிலியன் எந்த பக்கம் அப்படின்னு கண்டுபுடிச்சி ...அந்த வாச் மேன கூப்பிடலாம்னு பார்த்தா ......ஹூம்ம்  ஹும் ...எந்த பக்கிட்டு பார்த்தாலும் ஒரே பாறைகள் ...... அதுவும் 200 அடி 300 அடி உயரம் .....இங்க இருந்து இப்ப ஸ்டேடியத்தோட வாச கதவ மன கண்ணுல கற்பண பண்ணி பாருங்க .... எவ்ளோ ளோ ளோ ளோ ளோ... தூ ... தூ.... தூ .... தூரம் .........

அவ்வளவு தூ ... தூ.... தூ ....தூரம் ( சுமார் 1,20,000 ஒளி ஆண்டு ) குறுக்களவு இருக்கும் நம்ம சூரிய குடும்பம் இருக்கும் ....... பால் வீதி ( மில்கி வே ) ஊரு....

( அதாவது ஒளி .. வெளிச்சம் ஒரு நொடிக்கு 299,792 கிலோமீட்டர் வேகத்துல ....ஒரு வருஷம் பயணம் ஆனா 9.46 மில்லியன் கிலோமீட்டர் தூரம் கடந்து  போகும் ...... இப்படி போன தூரத்த தான் ஒரு ஒளி ஆண்டு அப்படின்னு சொல்லுறாங்க .... )

யோவ் ....டிரைவரு பிரேக்க போடு ....பிரேக்க போடு ......பிரேக்க போடுயா ......

ஓகே இன்னும் கொஞ்சம் குழப்பத்துல இருப்பவங்க திரும்ப ஒருக்கா பஸ்ட்ல இருந்து படிச்சிட்டு ..அப்புறம் கண்டினு பண்ணுங்க .....


மத்தவங்க போலாம்  ... ரைட்... ரைட்

இந்த பால் வீதி ( மில்கி வே ) ஊருல ....  பூமி இருக்குற சூரிய கூட்டு குடித்தன தெருவுக்கும் ....பக்கத்து தெருவுல இருக்கும் நம்ப சூரியன்னோட பெரியப்பா"திரு .பிராக்ஸ்ஸீமா  சென்டுரி "  அவர்கள் குடி இருக்கும் தெருவுக்கும்  இடைல உள்ள தூரம் ...... 4.3 ஒளி  ஆண்டு ....

நம்ம  மில்கி வே  ஊருள நம்ப தெரு மாதிரி சுமார் 400 பில்லியன் சூரிய தெருக்கள் இருக்கு ( ஒரு பில்லியன் அப்படினா பத்து லட்சம் X 10 X 100 )

நம்ம  மில்கி வே  ஊருக்கு பக்கத்து ஊரு ஆன்ட்ரமிடா .... 2.5 மில்லியன் ஒளி ஆண்டு தூதூதூதூதூரம் ......( ஒரு மில்லியன் அப்படினா பத்து லட்சம் ) அங்கெல்லாம் பஸ் போகாது ....

இது மாதிரி சுமார் 170 பில்லியனுக்கு குறையாத எண்ணிக்கைல அண்டத்துல ஊருங்க  இருக்கு .....( நாம அனுப்பி இருக்குற "  ஹப்பிள்  " தொலைநோக்கிக்கு அவளவுதான் பார்வ பவர் ...)

இப்ப த்க்னுண்டு இருக்குற ... நீங்க அய்யோ காபத்துங்க அப்படின்னு கத்துனா  அந்த சத்தம் ஸ்டேடியம் வாச்மேன் காதுல பட்டு அவர் வரதுக்குள்ள ...பூமியோட ஆயுளே முடிஞ்சி போய்டும் ......


அப்பாட ஒரு வழியா அண்டம் அதோட ப்ரெம்மாண்டம் முடிஞ்சிச்சு ......

அடுத்த பதிவுல  கருப்பு குள்ளன் & சிவப்பு அரக்கன்  ......


தொடர்ச்சி >>>>>>>

No comments:

Post a Comment

எப்போய்

எப்போய்