Sunday, October 6, 2013

காசு பணம் துட்டு மணி மணி - பதிவு 3



போன பதிவில் சோத்து காரர்களை வகை படுத்தி சொன்னேன் ...அப்படி வகை படுத்தப்படும் சொத்துகாரர்களை இரண்டு பெரிய பிரிவாக பிரிக்கலாம்

ஒன்று - பழைய பணம் – தலைமுறை தலைமுறையாக வரும் சொத்தை உடைய தனிநபர்களை பழைய பணம் என்கிறார்கள்...

இரண்டு - புது பணம் – இரண்டு தலைமுறையாக அல்லது தற்போது ஈட்டிய சொத்தை உடைய தனிநபர்களை புதிய பணம் என்கிறார்கள்....

இந்த மேற்சொன்ன வரையறைகள் தனிநபர் வரையறைகள் மட்டும் தான் ... உலக சொத்தில் தனிமனிதர்களின் சொத்து வெறும் பதினேழு விழுக்காடு தான் ....இவை அல்லாமல் நிறுவன மற்றும் அமைப்பு சொத்துகள் என  வகைகள் இருகின்றன அவைகள்  ...

1 ) சர்வ தேச அரசுகளின் இடர்பாட்டு நிதிகள் ,
2 ) பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் ,
3 ) பன்னாட்டு தனியார் தொழில் கூட்டமைப்புகள் ,
4 ) பன்னாட்டு முதலீட்டு வங்கிகள் ,
5 ) பன்னாட்டு தனிநபர் , குழும மற்றும் அறக்கட்டளைகளின்   சொத்து மற்றும் முதல் காப்பாளர்கள் ,
6 ) பன்னாட்டு முதலீட்டு கூட்டமைப்புகள் ,
7 ) மத அறக்கட்டளைகள் ,
8 ) மத சொத்து மற்றும் முதல் காப்பாளர்கள் ,
9 ) பன்னாட்டு சொத்து பறிமாற்ற நிறுவனங்கள் ,
10 ) பன்னாட்டு பண பறிமாற்று நிறுவனங்கள் ,
11 ) பன்னாட்டு சொத்து மேலாண்மை நிறுவனங்கள் .

ஆகியவைகலும் இவற்றின் உட்பிரிவுகலும் அடங்கும் , இவைகளின் சொத்துகளின் வரையறை என்பது நிகர சொத்து என்று அழைக்கபடுவதில்லை ....

அவற்றை அசட் அண்டர் மேனேஜ்மென்ட் என்று பொதுவாகவும் , சொவர்ஜின் அசட் , பிரைவேட் அசட் , பார்டிசிபெட்டரி அசட் , வெர்ஜின் , எட்ஜ் , வென்ச்சர்ஸ் , கன்சொளிடேட்ஸ் , இன்னும் பலவகையாக பிரித்து குறிப்பிடுவர் ...இவை ஒவ்வொன்றிற்குள்ளும் உட் பிரிவுகள் உண்டு ...

இவையனைத்தும் ஒரே சிலந்தி வலையின் வெவ்வேறு பிணைப்புகள் , ஒன்றை ஒன்று சார்ந்தும் விலகியும் செயல்படுகின்றன , பெரும்பாலும் இவைகள் தனித்து செயல் படுவதில்லை  ...

ஆயிரம் தலை நாகம் ஒன்றை கற்பனை பண்ணி கொள்ளுங்கள் ...அந்த ஆயிரம் நாக தலைகளும் அவைகள் இருக்கும் அந்த ஒற்றை உடலை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது என்று ஒன்றை ஒன்று சீறி கொண்டு , கடித்து கொண்டு ...... பின்னி , முறுக்கி , கூட்டாக , தனியாக , பலவாறு சண்டை, சூது , அழிவு செய்து வருவதை கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள் .....

நீங்கள் கற்பனை செய்தது அப்படியே ...மனித இனத்தின் மீது முழு ஆதிக்கம் கொள்ள நடத்த படும் மத , அரசியல் , பொருளாதார , சமூக சதிக்கு பொருந்தும் ...

இந்த சதியின் பின்னணி விபரங்கள் மிக பிரம்மாண்டமானவை .....இவர்கள் கூட்டனி வைத்து கொள்ளும் முறைகள்  , எதிர்க்கும் முறைகள்  , எதிரிகள் , நண்பர்கள் ..எப்பெப்போ மாறுவார்கள் ...உடனடி , நடுத்தர , நீண்ட கால திட்டங்கள் , எதிர் திட்டங்கள் , காய் நகர்த்தல்கள் , இவற்றையெல்லாம் விவரித்து எழுத ஒரு ரெண்டாயிரம் பக்கம் வேண்டும் ...அது கூட போதுமா என்று தெரியவில்லை .....

இதுவரை சொன்னவைகள் சற்றேனும் படிபவர்க்கு பயன்படும் என்று நம்பி ஒரு கேள்வியுடன் புல் ஸ்டாப் ...

கேள்வி :  தேவை , அளிப்பு , மதிப்புயர்தல் இவை எப்படி தனி மனித , நிறுவன , சர்வதேச பொருளாதாரம் எனப்படுகிறது ?

No comments:

Post a Comment

எப்போய்

எப்போய்