மேலே உள்ள படம் சூப்பர் நோவாவுடன் நம்ம சூரிய குடும்பம் ஒரு ஒப்பிடு
போன பதிவில்
நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பு பத்தி சொல்லியிருந்தேன் ...நட்சத்திரங்கள் தங்கள்
வாழ்நாளின் முடிவாக பெரிசாக வெடிச்சி இறந்து போகும் அந்த நிகழ்வுதான் சூப்பர் நோவா
..... 100 மில்லியன் சூரியர்களின் வெளிச்சத்துடன் பெரிசா வீங்கி வெடிச்சி களோபரம்
... முடிவில் ஏகப்பட்ட நியுற்றினோ துகள்களை அள்ளிவிசி கொண்டு வான வேடிக்கை ....இப்படி வெடிச்சி ரெண்டு வகையா மாற்றம் அடையும்
முதல் வகை
வெடி மையத்தின் காந்த
அடர்த்தி அதிகமாகி அக்கம் பக்கம் இருக்கும் குட்டி நட்சத்திரங்களை உள்ளுக்கு
இழுத்துகொண்டு இன்னும் வலுவான காந்த மைய்யத்தை உண்டு பண்ணிகிட்டா கொஞ்ச நாள்
கழிச்சி கரும் துவாரம் அதாவது ப்ளாக் ஹோல் ( black hole ) ஆகிடும் ...
ரெண்டாம் வகை
அப்படி ரொம்ப காந்த ஆற்றல் உண்டாகலனா நியுற்றினோ நட்சத்திரமா வெள்ளைய வெளிச்சம் தரும் குட்டி நட்சத்திரமா ஆகிடும்
ரெண்டாம் வகை
அப்படி ரொம்ப காந்த ஆற்றல் உண்டாகலனா நியுற்றினோ நட்சத்திரமா வெள்ளைய வெளிச்சம் தரும் குட்டி நட்சத்திரமா ஆகிடும்
மேலே உள்ள படம் துசு கூட்டத்தில் இருந்து பிளாக் ஹோல் வரை நடக்கும் மாற்றம் பற்றிய விளக்கம்
முதல் வகையான் பிளாக்
ஹோல்ங்கிறது ...ரொம்ப ரொம்ப கடுமையான் காந்த சக்தி இருக்குறதால வெளிச்சம் கூட
அதனோட ஈர்ப்பு சக்தியிலிருந்து தப்ப முடியாது ...விளைவு கருமையா வெட்ட வெளில
கண்ணுக்கு தெரியம் இருக்கும் ....
( வெளிச்சம்
அப்படின்னு நாம் சொல்லுறது போட்டான் அப்படிங்கிற சக்தி பொட்டலங்கள் ... இந்த
பொட்டலம் வெடிச்சி அலை அலையா மாறும் திரும்ப கூட்டு சேந்து போட்டான் பொட்டலமா
மாறும் ....
இதன் அடிப்படை மின்
காந்த கதிரியக்கம் ...இந்த போட்டான் துகள்கள் அணுக்குள்ள இருக்குற எலக்ட்ரான் ,
ப்ரோட்டான் , நியுட்ரான் வகையறாக்களை இன்னும் பொடுசு போடுசா உடச்சி பாத்தா
அதுக்குள்ள இருக்கு இப்படி உடச்சி உள்ள என்ன நடக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணுறதுதான்
குவாண்ட்டம் அறிவியல் ...
சரி விசயத்துக்கு
வருவோம் ...ஆக வெளிச்சம் அப்படிங்கிறது துகள்களாகவும் அலையாகவும் இருக்கும் மின்
காந்த கதிர் இயக்கம்...இவை ஒரு பொருளின் மீது பட்டு பிரதிபளிபதாலதான் நமக்கு அந்த
பொருள் தெரியுது .... நம்ம முன்ன சொன்ன
ப்ளாக் ஹோலின் காந்த ஆற்றலுக்கு தப்ப முடியாம வெளிச்சம் அதுக்குள்ள போய் ஐக்கியம்
ஆகிடும் ...)
இப்படி
சூப்பர் நோவா வெடிக்கும் போது அதிலிருந்து வெளியே வீச படும் துகள்கள் ஒரு நொடிக்கு
15,000 முதல் 40,000 கிலோமீட்டர் வேகத்தில் துக்கி விசப்படுது ... வேதி தனிம அட்டவணையில்
இரும்பு மற்றும் இரும்புக்கு மேலான ஸ்காண்டியம் , செரியம் , லுத்தியம் ,
பிளாட்டினம் , தங்கம் , போன்ற கன தனிமங்கள் இந்த சூப்பர் நோவா வெடிப்பதால் தான்
உண்டாகுகின்றன ... ( வேதி தனிம அட்டவனையை பற்றி தனியா ஒரு பதிவில் )
சூப்பர்
நோவா வெடிக்கும் போது அதனுள் அணு பிளவு நடபதில்லை மாறாக நியுற்றினோ பிணைப்பு
நிகழ்வதால் தான் கன தனிமங்கள் உருவாகுகின்றன ..... இப்படி நடக்கும் நியுற்றினோ
பிணைப்பு அதிவேக மற்றும் மிகவும் வேகம் குறையந்த முறையில் நடக்கிறது...
அடுத்த
பதிவில் சூப்பர் நோவா ஏன் வெடிக்குது ...
No comments:
Post a Comment