கருப்பு குள்ளன் & சிவப்பு அரக்கன்....பகுதி 2
மூணுல ஒரு பங்கு ஹைட்ரஜனும் மீதி பங்கு ஹீலியம் , மற்ற ரெண்டு பங்கு ஆக்சிஜன் , கார்பன் , நியான் , மற்றும் இரும்பு இன்னும் சில வாயு தனிமங்கள் .....சூரியனோட மொத்த எட 1.989 × 1030 கிலோ கிராம் அதாவது குத்து மதிப்பா பூமிய விட 3,30,000 மடங்கு எட கூட ...
கிட்டத்தட்ட 4.6 பில்லியன் வருசத்துக்கு முன்னாடி சூரியன் கெட்டி பட ஆரம்பிசியிருக்கணும் அப்படின்னு சொல்லுறாங்க ...தெர்மோ ந்யுக்ளியர் பியுசன் ( அணு பிளவு ) தொடர்ந்து நடகுரதால அவ்வளவு சூடும் , வெளிச்சமும் ......ஒரு நொடிக்கு சுமார் 650 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன சூரியன் எரிக்குது ...
இப்படி ஏகப்பட்ட ஹைட்ரஜன எரிச்சி சூரியன் வெளிவிடும் கதிர்களும் வெளிச்சமும் சூரியன்லேருந்து பூமிக்கு 8.3 நிமிசத்துல வந்து சேருது ...சரி சூரியன பத்தி இன்னும் விபரமா வேற ஒரு பதிவுல பாக்கலாம் .....இப்ப இந்த பதிவோட படத்த பாருங்க ...
ப்ரோட்டோ நச்சத்திர புக மண்டலம் அதுல நான்காம் நிலை நட்சத்திரங்கள் படத்தோட மேல தெரியுதா ...அங்க இருந்து தன்னோட பயனத்த ஆரம்பிசாப்ல நம்ம கதிரவன் ...தனக்குள்ள நடக்கும் அணு பிளவு அப்புறம் காந்த சக்தியால் ஒரு கட்டத்துல ஜி வகை ஏலாம் நிலை நட்சதிரமானாப்ள ...
அப்புறம் கொஞ்சம் பொருத்து ஒடம்ப ஒரு சிலுப்பு சிலுப்பி தன் கூட ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த தூசு , மேக கூட்டம் , பாதி கட்டியான பகுதி எல்லாத்தையும் தூர வீசினாப்ள .... இப்படி தூர வந்து விழுந்த மிச்ச சொச்சம் தான் பூமி உள்பட நம்ம சூரிய குடும்ப கிரகங்கள் ...
கிட்டத்தட்ட 4.6 பில்லியன் வருசமா பிரகாசிச்சுட்டு வரும் நம் சூரியன் இன்னும் ஒரு 5 பில்லியன் வருஷம் உயிர் வாழ்வார் ...முடிவுல எட்டாம் நிலை நட்சதிரமாகும்போது மெல்ல வீங்க ஆரம்பிச்சி இப்ப இருக்கும் அளவவிட 10 முதல் 100 மடங்கு பெருசா ஆகிடுவாப்ள ...அப்படி வீங்கி உருவம் மாறும் சூரியன சிகப்பு அரக்கன் அப்படின்னு சொல்லுறாங்க ....( நம்ம சூரியன்னு இல்ல கிட்ட தட்ட எல்லா நட்ச்சதிரத்தோடா கதையும் இப்படிதான் முடியும் ... )
சூரியன் வீங்க ஆரம்பிச்ச கொஞ்ச வருசத்துல சூரிய குடும்ப கோள்கள் எல்லாமும் ஒன்னு எரிஞ்சி சாம்பல் .....இல்ல சூரியனோட ஈர்ப்பு விசையால அதுக்குள்ள போய் விழுந்து ஐக்கியம் ஆகியிருக்கும் ... சூரியன் சிவப்பு அரக்கனா மாற ஆரம்பிக்கும்போதே பூமி கட்டாந்தரையா ஆகியிருக்கும் .....மனித இனம் இன்னும் 20,000 வருடங்களில் கிட்ட தட்ட இல்லாம போகிடும் அதிகம் போனால் கூடுதலா ஒரு 10,000 வருஷம் அப்புறம் பூமி மனுஷன் இல்லா கிரகம் அப்படின்னு சொல்லுறாங்க அதனால் சிவப்பு அரக்கன பாக்குற வாய்ப்பு நமக்கு இல்ல ....
இப்படி கொஞ்ச காலம் போன பின்னாடி எரிபொருள் தீர ஆரம்பிக்கவும் சிவப்பு அரக்கன் மெல்ல சுருங்கி சூரியனா இருந்தப்போ இருந்த அளவ விட பத்துல ஒரு பங்கா சிவப்பு குள்ளனா ஆகிடும் ...இப்படியே இன்னும் ஒரு 100 பில்லியன் வருஷம் காலத்த தள்ளிட்டு ...இன்னும் சுருங்கி சிவப்பு குள்ளனவிட பல ஆயிரம் மடங்கு சிறுத்து வெள்ளை குள்ளனா ஆகிடும் ...
இப்படி கொஞ்சம் காலம் போனதும் ரொம்ப இருகி ...வெளிச்சம் போய் கருப்பு குள்ளனாகிடும் ....அதுக்கு அப்புறம் டமால் .....பெருசா வெடிச்சி சூப்பர் நோவா ... இது நடக்க சுமார் 500 பில்லியன் வருஷம் டைம் இருக்கு ...
அடுத்த பதிவுல சூப்பர் நோவா
No comments:
Post a Comment