Tuesday, October 8, 2013

கருப்பு குள்ளன் & சிவப்பு அரக்கன்....பகுதி 1


கருப்பு குள்ளன் & சிவப்பு அரக்கன் ......பகுதி 1


தலைப்ப படிச்சிட்டு யார் இந்த கருப்பு குள்ளன் அவனுக்கும் அந்த சிவப்பு அரக்கனுக்கும் என்ன பிரெச்சனை ... புராண கதையில வர மாதிரி சண்ட ஏதும் போடுவாங்களா ...யாரு ஜெய்ப்பா .. அப்படி எல்லாம் ஏதும் கற்பனை பண்ணிக்க வேண்டாம் ..

இரவு நேரத்துல வானத்த அண்ணாந்து பார்த்தா ஏகப்பட்ட நட்சத்திரம் தெரியும்ல ...காதலர்களும் , கடவுள்களின் பூகோள ரெப்புகளும் அந்த நட்சத்திர சிதறல்களை காட்டி நமக்கு சொல்லும் சொர்க்கம் எந்த அளவுக்கு உண்மை .. இந்த நட்சத்திரங்களுக்கு இடையே சொர்க்கம் எங்கே ...அப்படின்னு நம்ம ஆளுங்க ஆராய்ச்சி பண்ணப்ப அண்டத்துல நடந்த , நடக்கும் , நடந்து கொண்டிருக்கும் பல ஆச்சரியத்த கண்டு பிடிச்சாங்க ...அப்படி கண்டு பிடிச்ச ஆச்சரியங்கள்ள ஒன்னு தான் இந்த குள்ளனும் , அரக்கனும் ...

இந்த ஆச்சரியத்த தெரிஞ்சிக்க நாம நெபுலா அப்படினா என்னங்குற எடத்துல இருந்து ஆரம்பிக்கணும் ...

சரி இப்போ நெபுலா :

தூசும் ஹைட்ரஜன் வாயும் மேக கூட்டமாய் அடர்ந்து திரிவதை நெபுலா அப்படின்னு சொல்லுறாங்க ...ஒரு கற்பனைக்கு விமானத்தில் போகும்போது சுத்திலும் எங்கபாத்தாலும் ஒரே மேகமா தெரயும்ல அதுமாதிரி ..என்ன இந்த மேக கூட்டம் மழையெல்லாம் பெய்யாது .... ஒரு சில லட்சம் ஒளி ஆண்டு தூரத்துல நெருங்கும் போதே நாமெல்லாம் பஸ்பம் ...அவ்வளவு வெப்பம் மற்றும் கதிர் இயக்கம் ...

இந்த நெபுலாக்களில் பல வகை உண்டு எமிசன் , ரேப்லெக்சன் , டார்க் இப்படி பல வகை ... இந்த நெபுலாக்களில் மெல்ல அங்க அங்க தூசுக்களும் வாயுக்களும் திரண்டு சேர்ந்து கட்டிபட ஆரம்பிக்கவும் .... நெபுலாக்களில் பிறக்கும் நட்ச்சத்திரங்களுக்கு ஹேப்பி பர்த்துடே .....
 ( படத்துல மேல் வலது பக்கம் இருக்கும் புகை மற்றும் நட்சத்திர கூட்டம் தான் நெபுலா )

இப்படி நட்ச்சத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்க சில பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகும் ...அம்மா வச்ச உருண்டை குழம்பில் உருண்டைகள் மேதகுரத போல ரொம்ப கெட்டி படாத பந்து பந்தாய் வாயும் தூசுமாய் நட்ச்சத்திரங்கள் மிதக்கும் புகை மண்டலத்தை ப்ரோட்டோ நட்சத்திர கோளம் அப்படின்னு சொல்லுறாங்க ...

மெல்ல புகையும் , தூசும் குறைந்து படி படியாக ஒவ்வொரு நட்சதிராமாய் கெட்டி பட்டு ஜொலிக்க ஆரம்பிக்கறத வெவ்வேறு நிலைகளாக சொல்லுறாங்க .....இப்படி கெட்டி பட்ட நட்சத்திரங்களில் ஒண்ணுதான் நம்ம பகலவன் ...

                                                                                                                            பகுதி 2 ………


No comments:

Post a Comment

எப்போய்

எப்போய்