அபீட்டு
:
உடாபுடியா நட்டா இங்க தான் நடுவேன்னு
டெலெண்ட் காட்டி ..கம்பிட் பண்ணி ..... நெறைய மொரப்பு வாங்கி ..... கிளாப்ஸ்
வாங்கி .....ஜிகு ஜிகு கலர் லைட்டுக்கு கீழே ஊக்கு விப்பான்களுடன் ....ஆமா அந்த
பண்ட் பெர்போர்மேன்ஸ் சரியில்ல ....என்ன வேல்யு போகுது .... அண்டர் கட் யார்
பண்ணுரா ....மிக்ஸ்டு பேக் லாம் நமக்கு சரி வராது .... இப்படி ஜம்பம் அடிச்சி ... 2007 ல நடந்த உலக பொருளாதார மோசடில 9 மாசத்துல ஆன் ரோட்டுக்கு
வந்தவங்கள்ள நானும் ஒருத்தன் ........ அந்த வீர வரலாறு சுருக்கமா
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்ல நடந்த
மாதிரியே ...கொஞ்சம் நம்ப ஊருக்கு ஏத்த மாதிரி வெட்டி ஒட்டி சப்- ப்ரைம்
மார்க்கெட் நாடக்க ஆரம்பிச்ச நேரம் .... (சப்- ப்ரைம் மார்க்கெட் அப்படினா என்னானு
தெரியாதவங்க...அதுக்குகென்னா இப்போனு கேக்கறவங்க
நேர பதிவின் கடைசி பத்திக்கு போங்க ....மத்தவங்க பிலோவ பாலோ பண்ணுங்க ...
ஊருக்கெல்லாம் நாங்க ..மார்க்கெட்
அப்படி..... மார்க்கெட் இப்படி
...அப்படியே மேலே.... மேலே ..... மேலே ..... போய்கிட்டே இருக்கும் .....அது
இதுன்னு கணக்கெல்லாம் போட்டு காட்டி கிரின் பண்ட் ( ஊரான் வீட்டு பணத்த எந்த கேள்வியும்
இல்லாம பண்ட் மேனேஜர் எப்படிவேனா ..எங்க வேனா முதலிடு பண்ணலாம் அதுக்கு இப்படி ஒரு
பேரு ) ரெடி பண்ணிக்கிட்டு இருந்தோம் .....
ஒரு கட்டத்துல நாங்க போட்ட கணக்க பாத்து
நாங்களே ஏமாந்து ஆஆ- நு வாய பொலக்கர மாதிரி ஆகிபோச்சி ......அடடா இப்படி ஒரு
வாய்ப்ப நாமளும் யூஸ் பண்ணிக்கணும் அப்படின்னு நெனச்சி ..பெருசா போட்டா பெருசா
அள்ளலாம்னு ( பேராச )..... எவ்வளவு
முடியுமோ அவ்வளவு பணத்துக்கு மூச்ச போட்டோம் ....
நான் அதுவரை கொட்ட நூத்து வச்சியிருந்த
எல்லாத்தையும் கணக்கு பண்ணி பாத்தப்ப ..போதலையே அப்படின்னு தோணிச்சி ...என்ன
மாதிரி பல பயலுங்க ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் அப்படின்னு இருந்தப்ப .....
" மாஸ்டர் டாக்ஸ் " ( இந்த பிரைவேட் பேங்க்ல ப்ரொடக்ட் டிசைன்
பண்ணுறவங்கள அப்படிதான் சொல்லுவோம் ) ஒரு நூதன திட்டம் சொன்னாய்ங்க ...
நீங்க இன்வெஸ்ட் பண்ண நாங்களே கடன்
கொடுக்கிறோம் ...அந்த கடனை கொண்டு நீங்க வாங்கும் பங்குகளை நாங்கள் ஜமீனா
வச்சிக்கிறோம் ....மார்க்கெட் மதிப்பு ஏற ஏற ....கொஞ்சம் கொஞ்சமா நாங்களே அந்த
பங்குகள வித்து கடன முடிச்சிக்கிட்டு ...மிதம் இருக்கும் பங்குகள நீங்க காச
ஆக்கசொன்ன ஆக்கிதறோம் இல்லேன நீங்க அத அப்படியே தொடர்ந்து வச்சிகிட்டலும்
சரின்னாங்க ....நாங்களும் ஆஹா ஓஹோ ..ப்ரில்லியண்ட் ....அப்படினுட்டு கலத்துல
குதிச்சிட்டோம் ...
எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு
இருந்துச்சி .... திடிருன்னு அமெரிக்காவுல எல்லாபயலும் மஞ்ச நோட்டிஸ் கொடுக்க
ஆரம்பிச்சிட்டாய்ங்க .....அதனால்தான் இங்க நம்ப காலி அப்படின்னு தெரிஞ்சி .....
உசாராகரத்துக்குள்ள ...கட கடனு சிட்டு கட்டு மாதிரி மார்க்கெட் மதிபெல்லாம்
விழுந்து ...... எங்க பாத்தாலும் ரெத்த சகதி..... பல பேர் செத்தே போய்டாணுவ
.....இந்த அல்லேலோ கொல்லேலோ
முடியறதுக்குள்ள இங்க எல்லாத்தையும்
ஊத்தி முடிட்டாய்ங்க ......
அப்புறம் என்ன .... கழுத்துல கத்தி
வைக்காத குறைதான் ....கடன வாங்கினவன் எல்லாம் உடனடியா பணத்த கட்டிபுட்டு
.....வாங்கி வச்சிருக்க பேப்பரெல்லாம் எடுத்துகிட்டு ஓடி போயிடுங்க அப்படின்னு ஒரே
பஞ்சாயத்து .....வேற வழி ....எல்லாத்தயும் போட்டு அடிச்சி ஒரு வழிய கடன முடிச்சி
...வெத்து பேப்பர டிமாட் அக்கௌன்ட்டுக்கு
மாத்திகிட்டு வெளியே வந்தப்ப ......ரெண்டு மாசத்துக்கு..... " த மாஸ்க்
" படத்துல வருமே ஒரு
கேரெக்டர் அது மாதிரி கண்ணு முழி ஒரு அடிக்கு வெளிய வந்து ...நாக்கு தரயில பட
...... பே ...னு இருந்துச்சி .....
வாங்குன அடிக்கு முதலாம் ஆண்டு நிறைவு
நாள் கொண்டாடுறத்துக்குள்ள ....மிச்ச சொச்ச ...மீராந்தியெல்லம் வழிச்சி ... டாபீ
தயார் பண்ணுறோம்முனு இறங்கி ....சக்கர வேல 15 மாசத்துல 300 % ஏறி ( இதுக்கு பின்னாடி கம்மாடிட்டி அப்படின்னு இன்னொரு அபத்தம் இருக்கு ....
அத அப்புறம் சொல்றேன் )..... இருந்த கோவணத்தையும் கிழிச்சிகிட்டு ..... முழிச்சி
பாத்தா .....வெட்ட வெளி ...சுத்திலும் கட்டாந்தர ......கண்ணனுக்கு எட்டுன
தூ...தூ...தூ...தூ ரம் வரிக்கும் பொட்டல் காடு ......எங்குகுகுகுகும்
.......நிசப்தம்ம் ம் ம் ம் ம் .........
2009ல .... மேனே ஆன் ரோடுமேன் தா
...... காம் , காண , கரென்சி ...எல்லாம் காலி .....
அப்புறம் என்ன ...அது இன்னொரு தபா ....
***************************
சப்- ப்ரைம் மார்க்கெட் அப்படினா என்னானு
தெரியாதவங்களுக்கு .........
""
-- நீங்க தப்பிசிட்டிங்க சார் -- ""
நம்ம ஊரு மங்காத்த மாதிரி ....ஒரு
டெக்னிக்கலான ப்ரெம்மாண்ட சூதாட்டம் ...... சுருக்கமா என்னானா ..... கடன திருப்பி
கட்டக்கூடிய வருவாய் உள்ளவங்க ...இல்லாட்டி அதுக்கு உரிய சொத்து மற்றும் பிற
ஜாமீன் உள்ளவங்க ....இவங்க உள்ள சந்தைக்கு ப்ரைம் மார்க்கெட் ....அதாவது முதல் தர
சந்தை அப்படின்னு பேரு ........அப்படி இல்லாம ....ஒரு வேல கஞ்சிக்கே அல்லல்
படுறவங்க ...... ஜாமீன் கடல்லேயே
இல்லையாம் அப்படின்னு சொல்லுற அப்பாவிஸ் ...... இவங்க உள்ள சந்தைக்கு சப்- ப்ரைம்
மார்க்கெட் .... அதாவது இரெண்டாம் தர சந்தை அப்படின்னு பேரு.....
இப்படி அப்பாவிஸ்களுக்கு வீடு வாங்க வாங்க கடன் கொடுத்து ..... ( தட்டு
முட்டு சாமான் வாங்கெல்லாம் கொடுக்க மாட்டாய்ங்க ...அதெல்லாம் பொசுக்குனுதான்
வட்டி வருவாய் தரும் அதனால வீடு வாங்க மட்டும் தான் முக்கியத்துவம் தருவாய்ங்க )
..... சரி விசயத்க்கு வருவோம் ....
இப்படி கொடுத்த கடன ......அந்த கடன்
அடைக்க தரபட்டிருக்கும் காலம் ( ஈ. எம் . ஐ ) அதற்கான வட்டி விகிதம் இதெல்லாம்
பொருத்து கடன்களை குரூப் க்ரூப்பா
பிரிச்சி ...அதையே ஒரு பாண்டா ரேட் பிக்ஸ் பண்ணி ஒருத்தன் தலைல காட்டுவாங்க ..அத
அவன் ...... இன்னொருத்தன் தலைல காட்டுவான் ..இப்படியே போகும் ....
கடைசில நம்ம
அப்பாவிஸ்ங்க கடன கட்ட முடியாம போனப்ப ... கடனேயே ஒரு பொருளா வியாபாரம் பண்ணாய்ங்
பாருங்க அவய்ங்க ...... அவய்ங்களுக்கு
கடன் கொடுதவைங்க ... .. இப்படி எல்லா பக்கிகளும்.....அடிச்சிகோ ......
புடிசிக்கோனு ஆளாளுக்கு வந்த ரேட்டுக்கு அந்த கடன் பாண்ட விக்க ஆரம்பிக்கவும்
......மொத்த அமெரிக்க பொருளாதாரமும் தொபேள்னு விழுந்துடிச்சி ...உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட
....இப்ப புருஞ்சிதா .....
No comments:
Post a Comment