Friday, October 4, 2013

காசு பணம் துட்டு மணி மணி - பதிவு 2



முதல் பதிவில் முதலீடு செய்ய கூடிய சொத்து மற்றும் நெட் அசட் ( நிகர சொத்து ) இத பத்தி ஒரு ஐடியா வந்திருக்கும் ...

இந்த பதிவில் சொத்து காரர்களை பற்றி கொஞ்சம் வரையறை ...
முந்திய பதிவில் சொன்ன படி , கூட்டி கழித்து வரும் மதிப்பின் அடிப்படையில் சொத்துகாரர்களை பின்வருமாறு வகை படுத்துகின்றார்கள் ..

மில்லினியர்கள் Millionaires – 

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பு உடையவர்கள் அல்லது உயர் நிகர சொத்து மதிப்பு உடைய தனிநபர்கள் - அல்லது ஹை நெட் வொர்த் இன்டிவிஜிவல்ஸ் :

இவர்கள்  குறைந்தது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பு உடையவர்கள்.....
உலகளவில் பதினோரு மில்லியன்$ தனிநபர்கள் இந்த வரையரையின் கீழ் வருகிறார்கள்....

 $ஆதாரம் கேப்கிமினி / ஆர்.பி.சி “உலக சொத்து அறிக்கை, இரேண்டாயிரத்து பனிரெண்டு ”  


இந்த உயர் நிகர சொத்து மதிப்பு உடைய தனிநபர்களை முதலீடு செய்ய கூடிய  சொத்து  மதிப்பின் அடிப்படையில் மேலும் பகுத்து பின்வருமாறு வகை படுத்துகின்றனர் ..

1 ) உயர் இடைநிலை நிகர சொத்து மதிப்பு உடைய தனிநபர்கள் - அல்லது மிட் டயர் மில்லினியர்கள் :-

இவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் முப்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்ய கூடிய சொத்து மதிப்பு உடையவர்கள் .
                                           
2 ) மிகு உயர் நிகர சொத்து மதிப்பு உடைய தனிநபர்கள் - அல்லது வெரி ஹை நெட் வொர்த் இன்டிவிஜுவல்ஸ் –

இவர்கள் குறைந்த பட்சம் இருபத்தியைந்து மில்லியன்$ அமெரிக்க டாலர் முதலீடு செய்ய கூடிய  சொத்து மதிப்பு உடையவர்கள் .
$ஆதாரம் நைட் பிரான்க் – அறிக்கை - இரேண்டாயிரத்து பனிரெண்டு. 
                                           
3 ) மீமிகு நிகர சொத்து மதிப்பு உடைய தனிநபர்கள் - அல்லது அல்ட்ரா ஹை நெட் வொர்த் இன்டிவிஜுவல்ஸ் –

இவர்கள் குறைந்த பட்சம் முப்பது மில்லியன்$ அமெரிக்க டாலர் முதலீடு செய்ய கூடிய சொத்து மதிப்பு உடையவர்கள்.....                உலகளவில் ஒரு லட்சம் தனிநபர்கள் இந்த வரையறையின் கீழ் வருகிறார்கள்..... இவர்களை ஊபர் ரிச் எனவும் ஆங்கிலத்தில் சொல்லுவது உண்டு…

$ஆதாரம் கேப்கிமினி / ஆர்.பி.சி “உலக சொத்து அறிக்கை, இரேண்டாயிரத்து பனிரெண்டு ”  
                                         
4 ) செண்டா மில்லினியர் – குறைந்த அளவு நூரு மில்லியன் டாலர் முதலீடு செய்ய கூடிய சொத்து மதிப்பு உடையவர்கள் .... உலகளவில் அறுபத்திமூவாயிரம்$  தனிநபர்கள் இந்த வரையறையின் கீழ  வருகிறார்கள்...இந்த எண்ணிக்கை இரேன்டாயிரத்து ஆறில் இருந்ததைவிட இருபத்தி ஒன்பது சதவீதம் அதிகம் ..

$ஆதாரம் லெட் பரி ரிசர்ச் - பில்லினியர் – அறிக்கை - இரேண்டாயிரத்து பனிரெண்டு ”  

இரேன்டாயிரத்து  பதிமூணு “போர்ப்ஸ்” அறிக்கையின் படி குறைந்த அளவு ஒரு பில்லியன் நிகர சொத்து மதிப்பு உடைய தனிநபர்கள் உலகளவில் ஆயிரத்து இரு  நூற்று  நாற்பத்து ஆறு பேர் உள்ளனர் ..

அடுத்த பதிவில் ... உலக சொத்து ...

No comments:

Post a Comment

எப்போய்

எப்போய்