காசு பணம் துட்டு வரிசையில் சொத்துகளை பற்றி சொல்லி முடிச்சப்ப
" தேவை , அளிப்பு , மதிப்புயர்தல் இவை எப்படி தனி மனித , நிறுவன , சர்வதேச பொருளாதாரம் எனப்படுகிறது ? "அப்படிங்கிற கேள்வியோட முடிச்சேன் ...
அந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா ...பணம் அப்படினா என்னான்னு சொல்ல ஆரம்பிக்கணும் .....
பணம் அப்படினா என்ன ? பேப்பர் நோட்டுக்கள் , சில்லரை காசு , பேங்குல இருக்குற பேலன்ஸ் , இப்படி ஏகப்பட்ட அநுமானம் நமக்கு வரும் ...ஆனா உண்மைய சொல்லனும்னா ..அதுவும் பலேருன்னு கன்னத்துல அரஞ்சாப்ள சொல்லனும்னா .... பணம் அப்படின்னு ஒன்னும் கிடையாதுங்கிறது தான் சரியான பதில் ...
என்னது பணம் அப்படின்னு ஒன்னும் இல்லையா ..என்ன லாரென்ஸ் உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா ..இல்ல சும்மானா எதாச்சும் சொல்லனும்னு சொல்லுறிய அப்படின்னு கேக்க தோணும் ....
என்ன பண்ணுறது ..நீங்கன்னு இல்ல கிட்ட தட்ட 300 வருசமா நம்மள கொஞ்சம் கொஞ்சமா நம்ப வச்சி ..இந்த மாயையை ஏத்துக்க வச்சியிருகாங்க ...அது எப்படி நடந்துச்சி .... அதுக்கு முன்னாடி கொஞ்சம் பிளாஸ் பேக் ...
கிட்ட தட்ட இரண்டாயிரம் வருசத்துக்கு முன் வரை மக்கள் தங்களுக்கு தேவைபடும் ஒரு பொருளுக்கு மாற்றா வேறொரு பொருள கொடுத்து வாங்கினாங்க .....இதுல ரொம்பவே சிக்கல் ...உதாரணமா உங்க கிட்ட ஒரு மூட்ட நெல்லு இருந்து உங்களுக்கு ஒரு மூட்ட சோளம் தேவைனா ...நெல்லுக்கு பதிலா சோளம் தர தயார இருக்குற ஒருத்தர தேட வேண்டி இருந்துச்சி .....இந்த பண்ட மாற்றுமுறை பல சிக்கல்களை உண்டுபண்ணவும் அதுக்கு ஒரு மாற்று ஏற்பாடு தேவ பட்டிச்சி ....
கால போக்குல கொஞ்சம் தட்டுபாடு இருக்குற பொருளுங்கள வாங்கிகிட்டு வேறு பொருள தர ஆரம்பிச்சாங்க ...யான தந்தம் , மயிலிறகு , தோல் , இப்படி ...அப்படியே கொஞ்சம் காலம் போனதும் ...உலகத்துல மக்கள் நகரங்களை உண்டு பண்ணி வாழ ஆரம்பிச்சதும் ...விவசாயம் , வேட்டை , மீன் பிடிகிறது , நெசவு இப்படி அடிப்படை தொழில்கள் இல்லாம புதுசா கட்டுமானம் , சுரங்கம் , உருக்கு தொழில் , இப்படி புது தொழில்கள் உண்டாச்சி ....இந்த சமயத்துல தான் காசு புழக்கத்துக்கு வந்துச்சி ...
எந்த எந்த பகுதில என்ன உலோகம் கிடச்சிதோ அத வச்சி காசு செஞ்சாங்க ...தங்கம் , வெள்ளி , செம்பு , ஈயம் , இதெல்லாம் பரவலா காசு செய்ய பயன்பட்டுச்சி ....இதுலேயும் ஒரு சிக்கல் ...
எந்த உலோகத்துல காசு செய்ய பட்டிருக்குமோ அந்த உலோகத்தின் மதிப்புதான் அந்த காசுக்கு அப்படிங்கிறது பரவலா ஏற்றுக்கொள்ள பட்டு இருந்தாலும் ..தங்கம் , வெள்ளி , செம்பு இதுக்கெல்லாம் மத்த பயன்பாடும் இருந்ததும் , ஒரு சேமிப்பாக இந்த உலோகங்கள் இருந்ததும் , தொடர்ந்து அரசியல் மாற்றங்கள் , படையெடுப்புகள் , ஒரு ராஜா போய் இன்னொருத்தர் வரது ... பெரிய சாம்ராஜ்ஜியம் ஒடஞ்சி போறது ....அம்பது கிலோமீட்டருக்கு ஒரு தண்டால் காரன் தன்ன ராஜாவா சொல்லிகிட்டது ....நேத்து வரிக்கும் அவன் வேலிக்குள்ள இருந்த சுரங்கம் இன்னக்கு வேறொருவன் வேலிக்குள்ள வந்தது ...இதெல்லாம் அந்த உலோகங்களோட மதிப்ப சீரா வச்சிக்க உதவல ...
இப்படியே நொண்டி அடிச்சிகிட்டு ...காசு , பண்ட மாற்று இது ரெண்டும் கலந்த கலவையா உலக , தனிமனித பொருளாதாரம் கி.பி .13ஆம் நுற்றாண்டு வர காலம் தள்ளிகிட்டு வந்துச்சி ..இதுக்கு நடுவுல சீனா காரன் கொஞ்ச நாள் காகித பணம் அடிச்சி பயன் படுத்திகிட்டு வந்திருக்கான் ...என்ன ஆச்சுனா ...யார் யாருக்கெல்லாம் அச்சடிக்க தெரியுமோ அவனெல்லாம் பக்கம் பக்கமா அச்சடிக்க ஆரம்பிக்கவும் ஒரு கட்டத்துல இந்த வம்பே வேணாமுன்னு பேப்பர் பணத்த விட்டுட்டான் ...
அப்பறம் சாவாகசமா ஐரோப்பிய நாடுகள் கி.பி .15 ல காசு , பண்டமாற்று அதுகூட பேப்பர் பணம் இதையும் சேர்த்து பொருளாதார பொங்கல் வச்சுதுங்க ....இங்கையும் சிக்கல் வர ஆரம்பிக்கவும் ஐரோப்பா நாடுகள் முழுதும் ஏகப்பட்ட கொழப்பம் ...சிக்கல் என்னானா ...பெரிய அளவுல எந்திரங்கள வச்சி பொருட்கள உற்பத்தி பண்ண முடிஞ்சப்ப ...அப்படி உற்பத்தி பண்ணுற பொருளுக்கு தேவையான மூல பொருட்கள் ஒரு இடத்திலேயும் ..அத உற்பத்தி பண்ணும் தொழிநுட்பம் ஒரு இடத்திலயும் இருந்தது ....
அது மட்டும் இல்லாம ஏகப்பட்ட கண்டுபிடுப்புகள் ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகள் ....யாரு யாரா அடிச்சி சாப்பிடுறதுங்கறதுல நாடுகளுக்கு இடையே பெரிய அளவுல போட்டி உண்டாயிடுச்சி ....அந்த போட்டி கூட்டு கொள்ளை , சதி பண்ணுறது , கால வாரிவிடுறது இன்னும் பல அயோக்கிய தனக்கள உண்டு பண்ணிச்சி ...இப்படி ஏக கொழப்பத்துல ஐரோப்பிய நாடுகள் இருந்தப்ப .... அங்க தான் வந்தான் நம்ப வில்லன் ...இதோட பிளாஸ் பேக் போதும் ....
யார் அந்த வில்லன் அது கொஞ்சம் சஸ்பென்ஸ்ல இருக்கட்டும் ...இப்ப நாம நிகழ் காலத்துக்கு வருவோம் ....
பணம் இல்லனா நவீன பொருளாதாரம் இல்ல அப்படின்னு ஒத்துகிறிங்களா !!! ...
அதாங்க ..வெண்மை புரட்ச்சி , பசுமை புரட்ச்சி , மகா மெகா அணைக்கட்டுகள் , சுரங்கங்கள் , பெட்ரோல் கிணறுகள் , பெரிய பெரிய தொழில் சாலைகள் , விண்ணை முட்டும் கட்டடங்கள் , புல்லெட் டிரையின் , சொகுசு கப்பல்கள் , டபுள் டெக் விமானங்கள் , இன்டர்நெட் , செல் போன் , ஹைடெபெனெசன் டிவி , 4டி சினிமா , இப்படி எல்லாத்துக்கும் அடிப்படை பணம் தான் இல்லையா ...
- சரி அந்த பணம் எங்கிருந்து வருது ...?
- பணத்துக்கு எது அடிப்படை ....?
- அதுக்கு எப்படி மதிப்பு வருது .....?
இந்த கேள்விக்களுக்கு பதில் கேட்டா ..அனேகமா நம்ம காலேஜ் எகனாமிக் ப்ரொபசருங்க ..முட்டா பயலே இருக்குற சிலபஸ படிக்க முடியல ..இதுல கேக்க வந்துட்டான் கேள்வி ..பிச்சி புடுவேன் பிச்சி மரியாதையா போறியா இல்ல ப்ரின்சி கிட்ட கொண்டு போய் விடவானு மெரட்டி அனுப்பிடுவாங்க ..
சரி வேற யார் கிட்ட கேக்குறது ...யாரவது ஆடிட்டர் ..இல்லனா பேங்குல வேலபாக்குரவங்க ...கொஞ்சம் மெனக்கட்டு பெரிய பெரிய பண முதலைங்க இவங்க கிட்ட கேட்டா ... !!! சொல்லுவாங்களா ?? ....இல்லாட்டி வட்டம் , மாவட்டம் அப்படின்னு யாரையாவது புடிச்சி நம்ம மாநில இல்லனா நாட்டோட நிதியமைச்சர் இவங்கள யாருகிட்டவாவது கேட்டா சொல்லுவாங்கலா ...
யாருகிட்ட கேக்கலாம் ...யோசிச்சி சொல்லுங்க .... இல்லனா உங்களுக்கே விடை தெரிஞ்சாலும் சொல்லுங்க ...அடுத்த பதிவுல விட்ட இடத்துல இருந்து பணத்த எண்ணுவோம் சரியா ....
எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் காந்தி ருவா நோட்டுல ஈன்னு சிரிப்பாரே அதுதான் பணம் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது சஸ்பென்ஸ் வைக்காமா சீக்கரமா சொல்லுங்க லாரன்ஸ்
ReplyDeleteஹா ஹா ஹா .. அது ரொம்ப பெரிய கதைங்க ...அடுத்த பதிவு வரை ரெண்டு நாள் யோசிங்க ...ஹா ஹா ஹா
Delete