போன பதிவுல பெர்மியான்ஸ் துகள்கள் , போசோன் துகள்கள் மூலமாதான் ஒன்றை ஒன்று வினை புரியுது அப்படின்னு சொல்லியிருந்தேன்...அது எப்படினா ...
ஒரு விசயத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிச்சாங்க ....
போசோன்கள் தான் பெர்மியான்ஸ்களுக்கு நிறையை தருது ..(நிறை அப்படினா எடை அப்படின்னு எடுத்துக்க கூடாது ....ஒருவகையில் சொல்லுறதா இருந்தா அடர்த்தியுடன் கூடிய எடை அப்படின்னு சொல்லலாம் .... திணிவு அப்படின்னும் சொல்லலாம்னு சொல்லுறாங்க ) ..
வெவ்வேறு துகள்கள் வெவ்வேறு திணிவுல இருக்குது.. உதாரணதுக்கு ப்ரோட்டான் துகள் எலக்ட்ரான் துகள்களை விட 1,837 மடங்கு அதிகமா திணிவு கொண்டது ...இது எப்படி வந்திருக்க முடியும் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணி இப்படி திணிவு வித்தியாசம் வரதுக்கு போசோன் தான் காரணமா இருக்க முடியும் அப்படின்னு முடிவுக்கு வந்தாங்க ..
போசோன்கள் எப்படி பெர்மியான்ஸ்களுக்கு திணிவு தருதுங்கிரத புரிஞ்சிக்க எவ்வாலோ வேணா தண்ணிய உறிஞ்சிக்கும் ஒருவகை பஞ்ச கற்பனை பண்ணிக்கோங்க ...இப்ப அந்த பஞ்ச கடல்ல போடுறிங்க , நீங்க கடல்ல போட்ட பஞ்சு எவ்வளோ வேணா தண்ணி உறிஞ்சிகும் இல்லையா ...இப்போ அந்த பஞ்ச கடல்ல போட்ட அரைமணி நேரத்துல எடுத்தா ஒரு எடையும் ..ஒரு மணிநேரம் கழிச்சு எடுத்தா வேற எடையும் இருக்கும்ல அது மாதிரிதான் ...
பெர்மியான்ஸ் அப்படிங்கிற துகள்கள் போசோன்கள் அப்படிங்கிற கடல்ல எவ்வளவு தொடர்புல இருக்கோ அவ்வளவு திணிவு உள்ளதா மாறிடும் ....அதாவது பெர்மியான்ஸ் துகள்கள் போசோன் துகள்களுடன் எந்த அளவுக்கு தொடர்புல இருக்கோ அந்த அளவுக்கு அதுக்கு திணிவு உண்டாகுது
ஆனா விஞ்ஞானிகளுக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல ..அதாவது இத்தனை துகள்களும் எப்படி ஒண்ணா இணைஞ்சி வேல செய்யுது அதுவரை கண்டுபிடிச்சி இருந்த போசோன் துகள்களில் எது இப்படி எல்லா துகள்களையும் பினச்சி வச்சியிருக்கு அப்படின்னு புரியல... இப்படி எல்லோரும் குழம்பி போய் இருந்தப்ப 1964 ல பீட்டர் ஹிக்ஸ் அப்படிங்கிற இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஒரு விசயத்த கண்டு பிடிச்சி சொன்னார் ..
முதல் கட்டுரைய ஏத்துகிட்ட அந்த பத்திரிக்கை ரெண்டாவது கட்டுரைய செல்லாது செல்லாது அப்படின்னு திருப்பி அனுப்பிட்டாங்க ...அதுக்கு பின்னாடி அந்த கட்டுரைக்கு மேலும் விளக்கம் தர சொல்லி யோய்ச்சிரோ அப்படிங்கிற விஞ்ஞானி சொல்லவும் ...ஹிக்ஸ் கடல் அலைகள் தரையை வந்து அடிகிற மாதிரி ..குவாண்டம் உலகில் துகள்கள் மோதிக்கும் போது தான் சொல்லும் அந்த புது வகை போசோன கண்டுபிக்கலாம் அப்படின்னு விளக்கினார் அந்த கட்டுரைய த பிஸிக்ஸ் பத்திரிகைக்கு போட்டி பத்திரிக்கை பிரசுரம் பண்ணாங்க ..
ஹிக்ஸ் ஆராய்ச்சி முடிவு படி அவர் சொன்ன புது வகை போசோன் மத்த எல்லா துகள்களையும் பினச்சி வச்சியிருக்கும் ....அத புருஞ்சிக்க ஒரு உதாரணம் ...அநேகமா நாம் எல்லாரும் பழங்கள் போட்ட கேக் ( fruit cake ) சாப்பிட்டு இருப்போம் ..அதுல இருக்குற பழங்களை விட அதில் இருக்கும் மாவு அதிக எடை இருக்கும் அத்தோட அந்த மாவு தான் பழங்களை பினச்சி வச்சியிருக்கு ...அது போல தான் இந்த போசோன் மத்த துகள்கள பினச்சி இருக்கு ...
இப்படி ஹிக்ஸ் சொன்ன போசோனுக்கு மைய்ய சுழற்சி இருக்காது மேலும் பிரதிபலிப்பு துகளுக்கு நேர் மின் தன்மை இருக்கும் அப்படின்னு முடிவு பண்ணி 40 வருசமா தேடுனாங்க ...( பிரதிபலிப்பு துகள்னா ரெட்டை துகள்னு அர்த்தம் இல்ல ..குவாண்டம் துகள்கள் பெரும்பாலும் துகளாகவும் ..அலையாகவும் நிலை மாறிகிட்டே இருக்கும் .....இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது என்ன மின் தன்மை இருக்கோ அதுக்கு எதிரான மின் தன்மை வேறு நிலைக்கு மாறும் போது இருக்ககும் )
அப்புறம் எப்படி கடுவுள் துகள்னு பேருவந்துச்சி அதுவும் ( CERN ) செர்ன் பத்தியும் அடுத்த பதிவுல தொடருவோம் ...
சராசரி ( law of averages ) மற்றும் பகிர்மானம் ( law of distributions ) அப்படிங்கிற இரண்டு கணித விதிகளை பத்தி போன பதிவுல சொல்லியிருந்தேன் அந்த இரண்டையும் விளக்கும்படி வீரா கேட்டிருந்தார் ..அதனால அத பத்தி கொஞ்சம் ...
சராசரி கணித விதி ( law of averages ) :
ப்ரோபபிளிட்டி probability பத்தி பள்ளிகூடத்துல படிச்சியிருப்போம் ஒரு காச சுண்டி போட்டா எத்தன முறை தலை விழும் எத்தனை முறை பூ விழும் அப்படின்னு வாத்தியார் சொல்லி கொடுத்தது புரியாம நாமளும் காச சுண்டி போட்டு பார்திருப்போம் ....
இப்படி 1000 முறை இல்லனா 1,00,000 முறை சுண்டி போட்டா ஒரு கட்டத்துல சரி அளவு தலயும் சரி அளவு பூவும் விழும் அப்படிங்கிறதுதான் இந்த சராசரி கணித விதி ....இன்னும் துல்லியமா சொல்லனும்னா அப்படி சரி அளவு தலயும் பூவும் விழும் வரை விடாம காச சுண்டிகிட்டே இருக்குறது
இப்படி லட்சம் தடவ காச சுண்டினா சரி அளவு பூவும் , தலயும் விழுமானா .. தெரியாது ... ஆனா இங்க வேறொரு விசயம் நடந்துடுச்சி... ஒருமுறை கூட காச சுன்டாமல் இருக்கம் நிலையை விட 11வது முறை நாம் காச சுண்டும்போது இன்னும் எத்தனை முறை சுண்டினா தலயும் பூவும் சரி அளவு விழும் அப்படின்னு கணக்கு போட முடியுது ..இத அடிப்படையா வச்சிதான் பெரிய பெரிய ஆராய்ச்சிலாம் நடந்துகிட்டு இருக்கு ...சரி அடுத்து
பகிர்மான கணித விதிக்கு ( law of distributions ) வருவோம் :
வேதியியல் அப்புறம் குவாண்டம் இயற்பியலில் இந்த விதி என்ன சொல்லுதுனா ஒரு வருசையில் உள்ள மூல கூறுகளின் மொத்த ஆற்றல் சரி சமமாக எல்லா மூல கூறுகளிலும் பிரிக்க படுவதில்லை .. மாறாக ஒரு சாரசரியின் அளவை ஒட்டி பிரிக்க படுதுனு சொல்லுது ...
புரியலையா ..சரி ஒரு உதாரணம் ....5 பேரு கொண்ட குழுவுக்கு சமைக்கணும் அப்படினா என்ன செய்யுறோம் வயசு , ஆண் , பெண் , உடல் உழைப்பு இப்படி பல விசயத்த அடிப்படையா வச்சி எவ்வளவு அரிசி வேக வைகிரதுனு முடிவு பண்ணுறோம்ல ..இங்க நாம சம அளவு இல்லாம ஒரு சராசரி அளவ எடுத்துகிட்டு இருக்கோம் இல்லையா இதுதான் ( law of distributions ) பகிர்மான கணித விதி ...